வியாழன், 8 ஜூன், 2017

சுப்பிரமணிய பாரதியார்

   

   சின்னசாமி ஐயர் இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு திசம்பர் 11, 1882இல் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள (அன்றைய திருநெல்வேலி மாவட்டம்) எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று அழைக்கப்பட்டார் 

   1887ஆம் ஆண்டு இலக்குமி அம்மாள் மறைந்தார். அதனால், பாரதியார் அவரது பாட்டியான பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார். தனது பதினொன்றாம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவி புனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டயபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சில காலத்திலேயே, அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டயபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றில் பாரதி வாழ்ந்தார். ஏழு ஆண்டுகள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் 'விவேகபானு' இதழில் வெளியானது. 

   வாழ்நாள் முழுதும் பல்வேறு காலகட்டங்களில் இதழாசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றினார். பாரதி, தமிழ், ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்தார்.

ஆறுமுக நாவலர்

   
உலகில் தோற்றம் பெற்ற மதங்களுக்குள் இந்து மதமே மிகம் புனிதமானது. தமிழ் மொழியே ஆதியானது. இவை இரண்டும் ஈழத்தில் மிகப் புராதன காலப்பகுதியில் இருந்தே மிகச் செல்வாக்குடன் காணப்பட்டன. பஞ்ச ஈஸ்வரங்கள் இதற்கு சான்றாகும். திரு மூலர் "சிவபூமி' என இலங்கையினை அழைப்பதனைக் காண முடிகிறது. இலங்கையினை ஆண்ட புராதன சிங்கள மன்னர்கள் கூட இந்து மதத்திற்கு நிறைவான பல பணிகளை மேற்கொண்டனர். அனுராதபுரத்தை தலைநகராக்கிய பண்டுகாபய மன்னன் அரச சபையில் அந்தணருக்கு ஒரு தொகுதியை வகுத்திருந்தான். இம்மன்னன் சிவலிங்க வழிபாட்டை ஆதரித்து சிவிக சாலைøயும் வேதங்களை பிராமணர்கள் ஓதுவதற்குரிய சொத்திக சாலையையும் நிறுவினார்.

   எல்லாளனை போரில் தோற்கடித்து துட்டகைமுனு மன்னன் கதிர்காமம் சென்று நேர்த்திக்கடன் மேற்கொண்டதாக "கந்த உபத' என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. "முத்தசிவ' "மகாசிவ' "அடசிவ' "கிரிகண்டசிவ' முதலான மன்னர்களும் சிவ என்ற அடைமொழியை வைத்து ஆட்சி புரிந்துள்ளதை அறிய முடிகிறது. இவ்வாறு சிறப்புற்ற நமது மதம் ஐரோப்பிய வருகை காரணமாக கடுமையாக தளர்ச்சி கண்டது. இலங்கையில் புகுந்த பிரித்தானியர்கள் இந்து மதத்திற்கு எதிராக கிறிஸ்தவத்தையும், தமிழ் மொழிக்கு எதிராக ஆங்கில மொழியையும் பரப்பினர். இதனால் இந்து மதமும் தமிழ் மொழியும் கடுமையான தளர்ச்சி கண்டன. ஆங்கிலேயர்களின் கவர்ச்சிப் போக்கினாலும் அற்ப சொற்ப சலுகைகளினாலும் ஆசை வார்த்தைகளையும் நம்பி நம்மவர்கள் பலர் மதம் மாறினார்கள். ஈழத்தில் இந்து மதம் அழிந்து விடுமோ என பலர் எண்ணிய போதுதான் விடி வெள்ளியாக இந்து மதத்தின் காவலாக 1822 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி கந்தப்பிள்ளை சிவகாமி தம்பதியினரின் புதல்வனாக ஆறுமுகம் என்ற பெயரோடு அவதரித்தவரே ஆறுமுகநாவலர்.

செல்வச்சந்நிதிஎங்கள் ஆலயம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன்.

புதன், 7 ஜூன், 2017

மகிழ்ச்சி


அல்வாய் சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் ஆலய இந்து இளைஞர் மன்றத்தின் சமய அறிவுப் போட்டியில் (மே 2017) முதலாம் பரிசில் பெற்றபோது.