வியாழன், 8 ஜூன், 2017

ஆறுமுக நாவலர்

   
உலகில் தோற்றம் பெற்ற மதங்களுக்குள் இந்து மதமே மிகம் புனிதமானது. தமிழ் மொழியே ஆதியானது. இவை இரண்டும் ஈழத்தில் மிகப் புராதன காலப்பகுதியில் இருந்தே மிகச் செல்வாக்குடன் காணப்பட்டன. பஞ்ச ஈஸ்வரங்கள் இதற்கு சான்றாகும். திரு மூலர் "சிவபூமி' என இலங்கையினை அழைப்பதனைக் காண முடிகிறது. இலங்கையினை ஆண்ட புராதன சிங்கள மன்னர்கள் கூட இந்து மதத்திற்கு நிறைவான பல பணிகளை மேற்கொண்டனர். அனுராதபுரத்தை தலைநகராக்கிய பண்டுகாபய மன்னன் அரச சபையில் அந்தணருக்கு ஒரு தொகுதியை வகுத்திருந்தான். இம்மன்னன் சிவலிங்க வழிபாட்டை ஆதரித்து சிவிக சாலைøயும் வேதங்களை பிராமணர்கள் ஓதுவதற்குரிய சொத்திக சாலையையும் நிறுவினார்.

   எல்லாளனை போரில் தோற்கடித்து துட்டகைமுனு மன்னன் கதிர்காமம் சென்று நேர்த்திக்கடன் மேற்கொண்டதாக "கந்த உபத' என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. "முத்தசிவ' "மகாசிவ' "அடசிவ' "கிரிகண்டசிவ' முதலான மன்னர்களும் சிவ என்ற அடைமொழியை வைத்து ஆட்சி புரிந்துள்ளதை அறிய முடிகிறது. இவ்வாறு சிறப்புற்ற நமது மதம் ஐரோப்பிய வருகை காரணமாக கடுமையாக தளர்ச்சி கண்டது. இலங்கையில் புகுந்த பிரித்தானியர்கள் இந்து மதத்திற்கு எதிராக கிறிஸ்தவத்தையும், தமிழ் மொழிக்கு எதிராக ஆங்கில மொழியையும் பரப்பினர். இதனால் இந்து மதமும் தமிழ் மொழியும் கடுமையான தளர்ச்சி கண்டன. ஆங்கிலேயர்களின் கவர்ச்சிப் போக்கினாலும் அற்ப சொற்ப சலுகைகளினாலும் ஆசை வார்த்தைகளையும் நம்பி நம்மவர்கள் பலர் மதம் மாறினார்கள். ஈழத்தில் இந்து மதம் அழிந்து விடுமோ என பலர் எண்ணிய போதுதான் விடி வெள்ளியாக இந்து மதத்தின் காவலாக 1822 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி கந்தப்பிள்ளை சிவகாமி தம்பதியினரின் புதல்வனாக ஆறுமுகம் என்ற பெயரோடு அவதரித்தவரே ஆறுமுகநாவலர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக